Thursday, March 26, 2020

காதல்

ஈர்ப்பு விசையாய் நீ
ஈர்க்கப்படும் படிவமாய் நான், 
புதுமையாய் நீ
புதுப்பிக்கப்படும் உயிர் நான், 
மகிழ்ச்சியாய் நீ
மகிழ்ந்திடும் உள்ளமாய் நான், 
நேர்மறை எண்ணமாய் நீ
உன்பிம்பமாய் நான்,
விளைந்தேன் உனை யறிய
காதல் என சிலாகித்தனன்... 


Friday, October 1, 2010

பனித்துளி











கண்ணாடி மேனி 
குளிர் தேகம்
இதமான ஸ்பரிசம்
உயிர்கொள்வதோ பின்னிரவில்
அழகோ இயற்கையின் பிம்பம் 
வைரமாய்  ஆதவனின் முதல்பார்வையில்
நாணத்தில் வண்ணம் அவன்கரங்கள் தீண்டுகையில்
புலனனைத்தும் அடங்குவது அவன்கத கதப்பில்

Wednesday, September 1, 2010

மனமே

எதிர்பார்க்காதே
ஏங்கிப்போவாய் !
அலட்சியப்படுத்தாதே
அவலப்படுவாய் !
தளராதே
தனிமைப்படுவாய் !
துவழாதே
வீழ்த்தப்படுவாய் !
எனினும்
உண்மையாய் இரு
உணரப்படுவாய் !!!

Wednesday, August 18, 2010

விவசாயி



சூரிய சந்திரர் இல்லா அதிகாலை
உறக்கம் கலைந்தும் கலையா பறவைகள்
பணித்துளி வடிந்தும் வடியா புல்தரை
சானம்தெளித்தும் கோலமிடப்படா மண்தரை
இவன் மட்டும் விழித்து தெளிந்த மனத்துடன்

Friday, August 13, 2010

வானவில்



வான்திரையில்;
எதிரொளிக்கும்
ஒளியும் நீர்த்துளியும்
கொண்டாடும் ஆனந்தக் கூத்து