Friday, October 1, 2010

பனித்துளி











கண்ணாடி மேனி 
குளிர் தேகம்
இதமான ஸ்பரிசம்
உயிர்கொள்வதோ பின்னிரவில்
அழகோ இயற்கையின் பிம்பம் 
வைரமாய்  ஆதவனின் முதல்பார்வையில்
நாணத்தில் வண்ணம் அவன்கரங்கள் தீண்டுகையில்
புலனனைத்தும் அடங்குவது அவன்கத கதப்பில்

Wednesday, September 1, 2010

மனமே

எதிர்பார்க்காதே
ஏங்கிப்போவாய் !
அலட்சியப்படுத்தாதே
அவலப்படுவாய் !
தளராதே
தனிமைப்படுவாய் !
துவழாதே
வீழ்த்தப்படுவாய் !
எனினும்
உண்மையாய் இரு
உணரப்படுவாய் !!!

Wednesday, August 18, 2010

விவசாயி



சூரிய சந்திரர் இல்லா அதிகாலை
உறக்கம் கலைந்தும் கலையா பறவைகள்
பணித்துளி வடிந்தும் வடியா புல்தரை
சானம்தெளித்தும் கோலமிடப்படா மண்தரை
இவன் மட்டும் விழித்து தெளிந்த மனத்துடன்

Friday, August 13, 2010

வானவில்



வான்திரையில்;
எதிரொளிக்கும்
ஒளியும் நீர்த்துளியும்
கொண்டாடும் ஆனந்தக் கூத்து

Tuesday, August 10, 2010

அம்மா

காலமெல்லாம் உனதருகேஇருக்க விழைந்தேன்
காலமோ சதி செய்துவிட்டது எனக்கு
காற்றோடு கலந்துவிட்டாய் என்றறிந்து
காணவந்தேன் இறுதியாய் உன் அழகுமுகத்தை
கண்ணீரோடு பிரிந்தேன் உன்நினைவுகளைச் சுமந்து
இவ்வுலகில் காணக்கிடைக்காத பொக்கிஷம்
நீ எனக்கு

Saturday, August 7, 2010

அம்மாவிற்கு - 4



அடுத்த பிறவி உண்டென்றால்
உருவாகவேண்டும் உனது கருவாகவே
நீ இல்லாமல் வருந்திய நாட்களை மீட்பதற்க்காகவே

Thursday, July 29, 2010

அம்மா

கருவறைத் தோழியாய்
குழந்தைபருவத் தோழியாய்
கன்னிபருவத் தோழியாய் - நல்ல
கணவன் தேடித் தந்த தோழியாய் - என்
கருவுக்கு தோழியாய் - உன்
கண் மூடும்வரை
கண்ணிமை மூடாமல் உயிர் தோழியாய்

Friday, July 23, 2010

அம்மாவிற்கு - 3



எனக்கு நோவு வந்தபொழுதனைத்தும் நோகாமல் கவனித்தாய்
உனக்கு வந்தபொழுதும் நோகின்றேன்
நானங்கு இல்லையென

அம்மாவிற்கு - 2



 நீ என்று உன் புடவையும்
 உன் மடி என்று தலையணையும்
 இப்படி இன்னும் எத்தனை இரவுகள்??

அம்மாவிற்கு


உன்னுடன் இருந்தவரை எனக்கென்று தேவைகள் ஏதும் இருந்ததில்லை
உன்னை பிரிந்திருக்கையில் தேவை வந்துவிட்டது எனக்கு
தேவைகள் என்னவென்று தெரிந்துகொள்ள